நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மறுமணம் செய்துகொண்டது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து திருமணமான சில தினங்களிலேயே வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருவரும் பிரிந்தனர்.
பிறகுத் தனது மகள்களுடன் வசித்து வரும் இவர், வட இந்தியாவைச் சேர்ந்த பைலட்டை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
இதுகுறித்து வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், “நான் உங்கள் அனைவருக்கும் ஒன்றை வெளிப்படுத்த விரும்புகிறேன். நான் சிங்கிளாகவே இருக்கிறேன். அப்படி தான் இருக்கவும் விரும்புகிறேன். அதனால் யாரும் வதந்தியைப் பரப்பவோ, நம்பவோ வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.