கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் வருமானமின்றி பசி, பட்டினியில் தவித்து வந்தனர். இதையடுத்து வறுமையில் சிக்கி தவித்து வருபவர்களுக்கு தன்னார்வலர்கள் தொடங்கி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களை வரை பலரும் உதவி செய்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அதில், ”அனைவருக்கும் வணக்கம். டிக் டாக் செயலியில் நான் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்காக ஸும்பா மற்றும் லத்தீன் நடனம் கற்றுக் கொடுக்கிறேன். அதில் என் கணக்கை 18 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் எனக்கு 5 கோடி ரூபாய் கிடைத்தது. அந்தத் தொகையை நான் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குகிறேன். எந்த நன்கொடையும் சிறியதில்லை. நாம் அனைவரும் ஒன்றாக இருந்து இந்த கரோனாவை ஒழிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளானர்.
இதையும் படிங்க: 'என் பெயரை பயன்படுத்தியது தவறான அணுகுமுறை’ - இயக்குநர் பாரதிராஜா