'கேடி' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதைத் தொடர்ந்து இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் தற்போது பிஸியாக நடித்துவருகிறார். ஒரு பக்கம் நடிப்பு என்றால் மற்றொரு பக்கம் யோகாசனம், உடற்பயிற்சி என்று தனது உடலை எப்போதும் மிகவும் ஃபிட்டாக வைத்துள்ளார்.
![தமன்னா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12:09:46:1595054386_tamannah-3_1807newsroom_1595054358_1095.jpg)
அந்த வகையில் தற்போது ஜிம் உடை அணிந்து மழையில் நனைந்தபடி யோகாசனம் செய்யும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியச் வைரலாகிவருகிறது. நடிகை தமன்னா தமிழில் கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான ‘ஆக்ஷன்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.