ட்விட்டரில் இன்று ட்ரென்டாகிவரும் நட்சத்திரங்களில் தமன்னா முன்னிலை வகித்துவருகிறார். அதற்கு காரணம் #AskTamannaah என்ற ஹேஷ்டேக்தான்.
இந்த ஹேஷ்டேக் மூலம் நடிகர் அஜித்துடன் 'வீரம்' படத்தில் நடித்த அனுபவம், காஜல் அகர்வாலுடனான நட்பு, ராம் சரணுடனான அடுத்த திரைப்படம், அழகு ரகசியம் குறித்த ரசிகர்களின் பல்வேறு கேள்விளுக்கு தமன்னா பதிலளித்துவருகிறார்.
குறிப்பாக அஜித்துடன் நடித்த 'வீரம்' திரைப்படத்தில் நடித்த காட்சி ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து 'இந்த படத்தை பார்த்தால் என்ன தோன்றுகிறது' என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு 'அவை பிடித்தமான நினைவுகள்' என்று தமன்னா பதிலளித்தார்.
இதையும் படிங்க: "எனக்கு நீங்க மாப்பிள்ளை பாருங்கள்" - நடிகை தமன்னா !