நடிகர் வெங்கடேஷ், மீனா நடிப்பில் தெலுங்கில் டிஜிட்டல் தளத்தில் வெளியான படம் 'த்ரிஷ்யம் 2'. இத்திரைப்படத்தில் நடிகை சுஜா வருணி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் நடித்தாலும், தனித்துவமான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் சுஜா. பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, தன்னுடைய துணிச்சலான குணத்தை வெளிப்படுத்தி ஹார்ட்டின்களை அள்ளியவர்.
'த்ருஷ்யம் 2' திரைப்பட நடிப்பின் மூலம் தமிழிலும் நடிக்க வாய்ப்புகள் குவிவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர் 'சுசீஸ் ஃபன்' எனும் யூட்யூப் சேனலையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த யூ-ட்யூப் சேனல் மூலம் அவர் கோடிகளில் வருமானம் ஈட்ட திட்டமிட்டுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதையும் படிங்க: விஷ்ணு விஷாலின் FIR ரிலீஸ் தேதி எப்போது?