இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1990ஆம் ஆண்டு வெளியான 'அஞ்சலி' திரைப்படம் தமிழ் ரசிகர்களால் கவனிக்க கூடிய ஒரு படம்.
இதில் ரேவதி, ரகுவரன், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த பேபி ஷாமிலியின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சுருட்டை முடியுடன் கூடியத் தலைமுடியை எப்போதும் விரித்துப் போட்டப்படி சிறப்பு குழந்தையாக நடித்த பேபி ஷாமிலியை 90'ஸ் கிட்ஸ்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.
பேபி ஷாமிலியை அப்படியே அள்ளி கொஞ்சத்தூண்டும் பேரழகுக் குழந்தையாக நடித்திருப்பார்.

அஞ்சலி படத்தில், சிறப்பாக நடித்தற்காக பேபி ஷாமிலிக்கு சிறந்த குழந்தைகளுக்கான தேசிய விருது கிடைத்தது.
அப்போது ஷாமிலிக்கு வயது இரண்டு. அதே படத்திற்காக தமிழ்நாடு அரசு விருதும் அவருக்கு கிடைத்தது. இவ்வளவு வெற்றிக்கு காரணம் அஞ்சலி பாப்பா தான்.

அதன் பின் ஷாமிலி பல தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட திரைத்துறையில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த பேபி ஷாமிலி வளர்ந்து, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் படிப்பில் கவனம் செலுத்திய ஷாமிலி தமிழில் கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான விக்ரம் பிரபுவின் 'வீர சிவாஜி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின் தமிழில் படவாய்ப்புகள் அமையாததால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.
ஷாமிலி நடிகை ஷாலினியின் தங்கை என்பது தெரிந்த ஒன்றே. அதே போல் 'திரெளபதி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரிச்சர்ட் ரிஷி இவர்களின் சகோதரர் ஆவார்.

ஷாமிலி அவ்வப்போது சமூகவலைதளத்தில் வெளியிடும் போட்டோக்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும்.

இப்படி திரையில் குட்டி ஏஞ்சலாக நடித்த பேபி ஷாமிலி இன்று (ஜூலை 10) தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஈடிவி பாரத் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.