உலகம் முழுவதும் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் ட்ரெண்டாவது வழக்கம். அந்த வகையில் இந்தியாவில் தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடும் சேலஞ்சை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தெலங்கானா எம்.பி. சந்தோஷ் குமார், நடிகர் நாகர்ஜுனா மற்றும் நடிகை சமந்தாவுக்கு மரம் நடும் சேலஞ்ச் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த சவாலை ஏற்று அவர்கள் தங்களது தோட்டத்தில் 3 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "எங்களுக்கு கொடுக்கப்பட்ட சவாலை ஏற்றுக் கொண்டு, மூன்று மரக்கன்றுகளை நட்டு வைத்தோம்.
மேலும் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா, தோழி ஷில்பா ஆகியோருக்கும் இந்த மூன்று மரக்கன்றுகள் நடும் சவால் விடுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் சவாலை அவர்கள் ஏற்பார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.