ETV Bharat / sitara

இதுவரை நடிக்காத கேரக்டர் 'பேரழகி ஐ.எஸ்.ஓ.' - பழம்பெரும் நடிகை சச்சு  பெருமிதம்

author img

By

Published : May 6, 2019, 5:22 PM IST

'எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் ஐந்து தலைமுறையாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் எனக்கு 'பேரழகி ஐ.எஸ்.ஓ.' படத்தில் இதுவரை நடித்திராத கேரக்டர் கிடைத்துள்ளது' என்று பழம்பெரும் நடிகை சச்சு தெரிவித்துள்ளார்.

பேரழகி ஐ.எஸ்.ஓ

கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் விஜயன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ.' இப்படத்தில் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' பட நாயகி ஷில்பா மஞ்சுநாத் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை நிறைந்த சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பழம்பெரும் நடிகை சச்சு ஷில்பாவின் பாட்டியாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பழம்பெரும் நடிகை சச்சு, தான் நடித்த அனுபவம் குறித்தும், தனது சினிமா பயணம் பற்றி விவரித்து பேசியுள்ளார். இதில், 'எம்.ஜி.ஆர், சிவாஜி காலம் முதல் ஐந்து தலைமுறையாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

actress Sachu
என்ன நடக்கப்போகுதோ...சச்சு அம்மா . ஷில்பா மஞ்சுநாத்

தற்போது தன்னிடம் கதை சொல்ல வரும் இளம் இயக்குநர்கள், உங்களுக்கென்று ஒரு கதாபாத்திரம் இருக்கு சச்சு அம்மா, அதில் நீங்க நடித்தால் பிரமாதமாக இருக்கும் என்று கூறும்பொழுது பெருமையாக இருக்கிறது. சினிமாவில் இப்போதைய கலைஞர்களுக்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக்கொள்கிறேன். அதனால்தான் 'பேரழகி ஐ.எஸ்.ஓ'. படத்தில் தன்னால் நடிக்க முடிந்தது. இத்தனை வருட காலத்தில் தான் நடிக்காத கேரக்டர் இது' அறிவியல் கதை என்றாலும் அலுப்பு தட்டாமல் நகைச்சுவையுடன் அனைவரும் ரசித்து பார்க்கும் திரைப்படமாக இது இருக்கும்' என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

sachu
என்னை யார்னு நினைச்சீங்க -பேரழகி ஐ.எஸ்.ஓ.' சச்சு

இதுவரை நான் நடிக்காத கேரக்டர் 'பேரழகி ஐ.எஸ்.ஓ'. "நடிகை சச்சு.
 
'கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ்' தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ'. இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சச்சு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது. 

படத்தின் கதாநாயகி ஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். அதன்பின் படத்தில் நடக்கும் கலாட்டாக்கள் தான் கதை 'பேரழகி ஐ.எஸ்.ஓ'. இந்தப்படத்தில் நடித்த அனுபவம்  குறித்து நடிகை சச்சு கூறுகையில்,

“எம்.ஜி.ஆர் - சிவாஜி காலம் முதல் கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையாக சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

இப்போதுள்ள இயக்குனர்கள் எனக்கென்று ஒரு கதாபாத்திரம் இருப்பதாக கூறி என்னை அழைப்பதையே மிக பெருமையாக நினைக்கிறேன். இப்போதைய கலைஞர்களுக்கு ஏற்றாற்போல் என்னை மாற்றிக்கொள்கிறேன். 

அதனால் தான் இந்த படத்தில் ஒரு புதுவிதமான கதாபாத்திரம் என்றதும் என்னால் எளிதில் ஒப்புக்கொள்ள முடிந்தது. இத்தனை வருட காலத்தில் நான் இதுவரை நடிக்காத கேரக்டர் இது. வயதானாலும் கூட பியூட்டி பார்லர் சென்று தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் இந்த கதாபாத்திரம்  இப்போதும் கூட நிஜத்தில் நிறைய பெண்களை பார்த்திருக்கிறேன். அதைத்தான் இந்தப்படத்தில் பிரதிபலித்திருக்கிறேன்.

பெண்கள்  தங்களது அழகை வெளிப்படுத்த அறிவியல் தொழில்நுட்பத்தை  எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என ஒரு வரைமுறை இருக்கிறது. சில தவறான இடங்களில் அதை பயன்படுத்தும் போது ஏற்படும் பின்விளைவுகள் என்ன அதன் பிரச்சனைகள் என்ன என்பதை தான் இந்த பேரழகி ‘ஐ எஸ் ஓ’ படத்தில் முக்கியமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜயன். அறிவியல் கதை என்றாலும் அதை சீரியசாக இல்லாமல் நகைச்சுவை கலந்து ஒரு பாட்டி பேத்தியின் கதையாக அனைவரும் பார்க்கும் விதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயன் என்கிறார் சச்சு.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.