ETV Bharat / sitara

பாக்ஸிங் மனநிலைக்கு மாறிய 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகா சிங் - பாக்ஸிங் செய்யும் ரித்திகா சிங்

பாக்ஸிங்கை மையமாக வைத்து வெளியான 'இறுதிச்சுற்று' தமிழ் படத்தில் நடித்திருந்த நடிகை ரித்திகா சிங், தான் பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Actress Ritika singh
author img

By

Published : Oct 23, 2019, 2:17 AM IST

சுதா கொங்காரா இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'இறுதிச்சுற்று'. பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தில் பாக்ஸரான ரித்திகா சிங் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர்கள் மாதவன், நாசர், ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. அதிலும் குறிப்பாக படத்தில் பாக்ஸராக கலக்கியிருந்த ரித்திகா சிங், ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றார். அதைத் தொடர்ந்து 'ஆண்டவன் கட்டளை', 'சிவலிங்கா' உள்ளிட்ட தமிழ்படங்களிலும் ரித்திகா சிங் நடித்தார். தற்போது அவர் அருண் விஜய் உடன் 'பாக்ஸர்', அசோக் செல்வன் உடன் 'ஓ மை கடவுளே' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துவருகிறார்.

இதில் விவேக் இயக்கத்தில் உருவாகிவரும் பாக்ஸர் திரைப்படத்தில் ரித்திகா சிங் மீண்டும் பாக்ஸராகவே நடித்துவருகிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகத்தில் காயங்களுடன் இருந்த அருண் விஜய், ரித்திகா சிங் ஆகியோரின் கெட் அப் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் ஆவலை தூண்டியது.

இதனிடையே நடிகை ரித்திகா சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதில் அவர் தனது பயிற்சியாளருடன் ஆக்ரோஷமாக பயிற்சியில் ஈடுபடுகிறார். மேலும் பாக்ஸிங் பேடுகளை குத்துவது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Intro:Body:

Smashing pads after ages! Feels sooo good 😍#boxing #kickboxing #padwork #workout pic.twitter.com/SlyQu3zUui
— Ritika Singh (@ritika_offl) October 22, 2019

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.