கரோனா ஊரடங்கு காரணமாக நடிகர், நடிகைகள் வீட்டுக்குள்ளே முடங்கி உடற்பயிற்சி, யோகா உள்ளிட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமன்னா, மனீஷா கொய்ராலா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வந்து யோகா செய்வது ட்ரெக்கிங் போவது போன்ற வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் நடிகை ரகுல் பிரீத் சிங் சமீபத்தில் ஊட்டிக்குச் சென்று 5 மணி நேரம் கோல்ஃப் விளையாடி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில்,“ஒரு நாள் ஊட்டியில் நன்றாக கழிந்தது. ஐந்து மணி நேரம் மைதானத்தில் விளையாடி, 18 முறை இலக்கை எட்டினேன். அதுவும் கடும் வெயிலில்" என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதையும் படிங்க: 'சுஷாந்த் சிங் ராஜ்புட் படுகொலை செய்யப்பட்டார்'- சொல்கிறார் சுப்பிரமணியன் சுவாமி!