ETV Bharat / sitara

எக்ஸ்பிரஷன் குயின் நஸ்ரியாவுக்கு பிறந்தநாள் - குவியும் வாழ்த்து - நஸ்ரியா பிறந்தநாள் ஸ்பெஷல்

எக்ஸ்பிரஷன் குயின் நஸ்ரியா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

எக்ஸ்பிரஷன் குயின்
எக்ஸ்பிரஷன் குயின்
author img

By

Published : Dec 20, 2021, 7:49 AM IST

'பளுங்கு கீதா' என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நஸ்ரியா. இதனையடுத்து தமிழில் ஒருநாள் ஒருகனவு என்ற படத்தில் நடித்தார்.

தொடர்ந்து படங்கள் ஒரு பக்கம் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் என சிறு வயதிலேயே தனது முழு திறமையையும் காண்பித்தார். பின்னர் நேரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு என ஒரு கூட்டம் உருவானது.

எக்ஸ்பிரஷன் குயின்
எக்ஸ்பிரஷன் குயின்

இந்த வெற்றியைத் தொடர்ந்து ராஜா ராணி படத்தில் ஆர்யாவின் காதலியாக நடித்திருந்தார். 'பிரதர் எனக்கு already ஆள் இருக்கு' என அவர் கூறிய வசனம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. குறும்புத்தனமான செயல், சுட்டித்தனமான பேச்சு என நடித்து பல இளைஞர்களின் மனதை திருடிச் சென்றார்.

திருமணம் எனும் நிக்காஹ் பட புகைப்படங்கள்

படத்தில் நஸ்ரியாவுக்கு கொடுத்த கதாபாத்திரம் மிக அருமையான கதாபாத்திரம் என்பதால் எளிதில் ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதாக பெற்றார். அந்த வகையில் 'நையாண்டி', 'திருமணம் எனும் நிக்காஹ்' என அடுத்த அடுத்த படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகள் பட்டியலில் நுழைந்தார்.

கணவருடன் நஸ்ரியா
கணவருடன் நஸ்ரியா

படங்களில் நடித்துக் கொண்டே இருந்தபோது நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். என்ன தான் இவர் திருமணத்திகு பிறகு ஒரு பெரிய பிரேக் எடுத்தாலும் ரசிகர்களின் கனவு கன்னியாகவே இருந்தார்.

அதனால் தான் என்னவோ மீண்டும் ரசிகர்களுக்காக தனது கணவர் படமான ட்ரான்ஸ் படத்தின் மூலம் ரீ- என்டரி கொடுத்தார். நஸ்ரியா என்றால் ரசிகர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது அவரின் குழந்தை தனமான எக்ஸ்பிரஷன் தான்.

கணவருடன் நஸ்ரியா
கணவருடன் நஸ்ரியா

எக்ஸ்பிரஷன் குயின் நஸ்ரியா இன்று (டிசம்பர் 20) தனது 26 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏழை மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டும் விஜய்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.