தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸை நிரப்புவதால் லேடி சூப்பர் ஸ்டார் எனவும் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்துவருகிறார்.
சமீபத்தில் இருவரும் ஒன்றாக இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அதன்மூலம் லாபம் பார்க்கத் தொடங்கியுள்ளனர். மேலும் தான் திரைப்படங்களில் சம்பாதிக்கும் பணத்தினைப் பல்வேறு துறைகளிலும் அவர் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 10) தோல் மருத்துவர் ரெனிடா ராஜனுடன் இணைந்து அழகுசாதனப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நயன்தாரா. இந்நிறுவனத்துக்கு ‘தி லிப் பாம் கம்பெனி’ எனவும் அவர் பெயர் சூட்டியுள்ளார்.
பெயரைக் கொண்டே இது முழுக்க முழுக்க லிப் பாமிற்காகப் பிரத்யேகமாகத் தொடங்கப்பட்ட நிறுவனம் எனத் தெரியவருகிறது. இது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நயன்தாராவின் முயற்சிக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஓ சொல்றியா... ஓ ஓ சொல்றியா...'; கவர்ச்சிப் புயலாய் மாறிய சமந்தா!