இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் 'நெற்றிக்கண்'. மிலந்த் ராவ் இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுபெற்றது. கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக 'நெற்றிக்கண்' திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நயன்தாரா கண்பார்வை அற்றவராக நடித்துள்ளார்.
நயன்தாரா முதன்முறையாக கண்பார்வை அற்றவராக நடித்துள்ள நிலையில், ரசிகர்களிடையே நெற்றிக்கண் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக படத்தின் டீஸரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி சமூகவலைதளத்தில் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்தநிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இதுவும் கடந்து போகும்’ பாடல் ஜூன் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கிரிஷ் கோபால கிருஷ்ணன் இசையமைக்கும் இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
-
9️⃣JUNE 9️⃣AM 📌 its all 9 🎵 #IdhuvumKadandhuPogum from #Netrikann coming your way! ❤️
— Nayanthara✨ (@NayantharaU) June 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The #HealingSong ! 🎶#NetrikannSingle pic.twitter.com/Er9oN3mj7k
">9️⃣JUNE 9️⃣AM 📌 its all 9 🎵 #IdhuvumKadandhuPogum from #Netrikann coming your way! ❤️
— Nayanthara✨ (@NayantharaU) June 7, 2021
The #HealingSong ! 🎶#NetrikannSingle pic.twitter.com/Er9oN3mj7k9️⃣JUNE 9️⃣AM 📌 its all 9 🎵 #IdhuvumKadandhuPogum from #Netrikann coming your way! ❤️
— Nayanthara✨ (@NayantharaU) June 7, 2021
The #HealingSong ! 🎶#NetrikannSingle pic.twitter.com/Er9oN3mj7k
முன்னதாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் போன்றவை காலை 9மணி 9 நிமிடங்களுக்கு வெளியானது. தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிளும் ஜூன் 9ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. இதைவைத்துப்பார்க்கும் போது 'நெற்றிக்கண்' படத்தில் 9 மணிக்கோ அல்லது 9ஆவது நம்பருக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இரவு 9 மணிக்கு விளக்கு கேற்றுமாறு பிரதமர் மோடி கூறியபோது நயன்தாரா இரவு 9 மணிக்கு விளக்கேற்றியது குறிப்பிடத்தக்கது.