தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, தனது 35ஆவது பிறந்தநாளை நாளை கொண்டாடவிருக்கிறார்.
இதையடுத்து தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் இருவரும் நடந்து செல்லும் புகைப்படம் ட்விட்டரில் வெளியாகியுள்ளது.
மேலும், 'நாம் எங்கு நடக்கிறோம் என்பது முக்கியமல்ல, யார் நம்முடன் நடக்கிறார்கள் என்பதே முக்கியம்' என காதல் பொங்க அவரின் புகைப்படம் வெளியான ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
-
Its not where you walk, its who walks with you 👣 #VikkyNayan 🥰 pic.twitter.com/0dGo82V6vK
— Nayanthara✨ (@NayantharaU) November 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Its not where you walk, its who walks with you 👣 #VikkyNayan 🥰 pic.twitter.com/0dGo82V6vK
— Nayanthara✨ (@NayantharaU) November 17, 2019Its not where you walk, its who walks with you 👣 #VikkyNayan 🥰 pic.twitter.com/0dGo82V6vK
— Nayanthara✨ (@NayantharaU) November 17, 2019
தற்போது 'தர்பார்' படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நயன்தாரா, 'நெற்றிக்கண்', 'மூக்குத்தி அம்மன்' போன்ற படங்களிலும் கமிட்டாகி இருப்பதால் இந்த ஆண்டு பிறந்தநாள் அவருக்கு முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் இலங்கை பிரதமர் ஆவாரா மகிந்த ராஜபக்சே?