சென்னை: நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கவுள்ளனர். கூழாங்கல் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் குறித்த அறிவிப்பை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகவுள்ள இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கவுள்ளார்.
இதுதொடர்பாக விக்னேஷ் சிவன் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், " மிக அரிதான ஒரு நாள்தான், ஒரு படைப்பை பார்த்து வியந்து நாம் இருக்கும் துறையை நினைத்து பெருமை கொள்ளத் தோன்றும், அப்படி ஒருநாளாக இறுதிகட்ட பணிகளில் இருக்கும் கூழாங்கல் எனும் படத்தை பார்த்தபோது தோன்றியது.
இது இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜின் முதல் படம். தலைப்பை போலவே படம் மிக எளிமையாக இருந்தாலும் அது எங்களுக்கு ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது. தன்னுடைய பின்னணி இசையால் கூழாங்கல்லின் ஆன்மாவை மீட்டெடுத்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இத்தகைய படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களிலும் கொண்டு செல்வது என முடிவு செய்து இப்படத்தின் முழு தயாரிப்பு பொறுப்பை ஏற்றுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதியவர்களின் வாழ்க்கை குறித்து பேசும் 'சியான்கள்'