ETV Bharat / sitara

வயசானாலும் உங்க அழகும் இளமையும் உங்கள விட்டு போகலா:நதியாவை புகழந்து தள்ளும் நெட்டிசன்கள் - நடிகை நதியா

சென்னை: 'பூவே பூச்சூடவா' படத்தில் சிறுவர்களாக நடித்தவர்களுடன் நதியா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது.

Nadhiya
Nadhiya
author img

By

Published : Jul 21, 2021, 1:25 PM IST

தமிழ் சினிமாவில் 1985 ஆம் ஆண்டு வெளியான 'பூவே பூச்சூடவா' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நதியா. இந்த படத்தில் கிடைத்த வரவேற்பையடுத்து நதியா தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

அன்றைய காலகட்டத்தில் பெண்கள் மத்தியில் 'நதியா பேஷன்' என ட்ரெண்ட் செட் செய்தார். 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நதியா 1994ஆம் ஆண்டு வரை படங்களில் நடித்து வந்தார்.

அதன் பின் நதியா திரையில் இருந்து விலகி தனது குடும்பத்தை கவனித்து கொண்டார். பின் மீண்டும் 2004ஆம் ஆண்டு 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் சிறப்பு தோற்றம், முக்கிய கதாபாத்திரத்தில் தற்போது வரை தொடரந்து நடித்து வருகிறார்.

Nadhiya
சிறுவர்களுடன் நதியா

சமூகவலைதளப்பக்கத்தில் கணக்கைத் தொடங்கிய நதியா அவ்வப்போது தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இதைப்பார்க்கும் நெட்டிசன்கள் அப்போது பார்க்க நதியா எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியே தான் இருக்கிறார் என கருத்து தெரிவித்து வருகின்றனர். நதியாவுக்கு 25, 20 வயதுடைய இரண்டு மகள் உள்ளனர்.

மலையாளத்தில் 1984ஆம் ஆண்டு 'நோக்கெதூரத்து கண்ணும் நட்டு' நதியா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப்படம் பின் தமிழில் 1985 ஆம் ஆண்டு 'பூவே பூச்சூடவா' என்னும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

Nadhiya
பூவே பூச்சூடவா சிறுவர்களுடன் நதியா

இந்நிலையில், நதியா 'பூவே பூச்சூடவா' படத்தில் தன்னுடன் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த சமீர், ஆசிப் ஆகியோருடன் இருந்த அப்போதைய புகைப்படத்தையும், தற்போது அவர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தையும் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

இந்த பதிவு சமூகவலைதளத்தில் வைரலானாது. பலரும் உங்களுடன் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் இப்போது வயதாகி விட்டனர். ஆனால் நீங்கள் அப்படியே இளமையாக இருக்கிறீர்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கமலுடன் ஜோடி சேரும் நதியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.