ETV Bharat / sitara

'உங்கள் கண்கள் என்னை வெட்கப்பட வைக்கிறது' - காதல் குறித்து குஷ்பூ நெகிழ்ச்சி - kushboo and sundar.c

நடிகை குஷ்பூ, சுந்தர். சி உடனான தனது 25 ஆண்டுகால காதல் வாழ்க்கை குறித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

25 ஆண்டு காதல் குறித்து குஷ்பூ நெகிழ்ச்சி

author img

By

Published : Feb 23, 2020, 7:31 AM IST

தமிழ் சினிமாவில் 80, 90களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்துவருகிறார். இவருக்கும், நடிகரும், இயக்குநருமான சுந்தர். சி-க்கும் 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையில் சுந்தர். சி- குஷ்பு காதலித்து இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகியுள்ளதாம். இதுகுறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”25 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் தான் நீங்கள் என்னிடம் காதலை வெளிப்படுத்தினீர்கள். இத்தனை ஆண்டுகளில் இந்தப் புகைப்படங்களைத் தவிர வேறு ஒன்றும் மாறவில்லை. உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன். இன்றும் உங்கள் கண்களைப் பார்த்தால் நான் வெட்கப்படுகிறேன். எனக்கு எல்லாமே நீங்க தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  • It was on this day, 25 yrs ago, you proposed to me..nothing has changed over these years,except the pics. I still love you the same. You still make me blush when I look into your eyes..I still go weak in my knees as you smile. You are my all. #25yrs #silverjubilee ❤💞😍💝 pic.twitter.com/U5lUTddSnL

    — KhushbuSundar ❤️ (@khushsundar) February 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

குஷ்பூவின் இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: யூ-ட்யூபில் 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த 'குட்டி ஸ்டோரி' பாடல்: விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.