ETV Bharat / sitara

'எம்ஜிஆர் தடவுனதை விட அதிகமாக தடவும் சென்னை அணி' - நடிகை கஸ்தூரி - சர்ச்சை

நடிகை கஸ்தூரி மக்கள் திலகம் எம்ஜிஆரை, சிஎஸ்கே அணியுடன் இணைத்து கொச்சைப்படுத்தி ட்விட் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கஸ்தூரி ட்விட்
author img

By

Published : Apr 10, 2019, 10:18 PM IST

கொல்கத்தா- சென்னை அணிகளுக்கிடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வென்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்தது. 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி ஆமை வேகத்தில் மூன்று விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை தொட்டது.

actress kasthuri twitter
நடிகை கஸ்தூரி

இந்நிலையில், நடிகை கஸ்தூரி சென்னை அணியின் ஆட்டத்தை கிண்டல் செய்யும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது. இதில், 'என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs)' சென்னை அணியின் ஓவரையும் குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நடிகை கஸ்தூரியை தகாத வார்த்தைகளால் திட்டி வசை பாடியுள்ளனர். மேலும், அநாகரீகமான பதிவு என ஒருவர் தெரிவித்திருந்தார்.

எதிர்ப்புகள் அதிகம் வரத்தொடங்கியுள்ள நிலையில் அதே பாணியில், 'MGR காதல் காட்சியில் நடித்ததில் , கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்". எனக் கூறி மன்னிப்பு கோரியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.