நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்து வெளிவந்த 'கோமாளி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பட்ஜெட் 50 கோடி ரூபாய்யை தாண்டி வசூல் வேட்டை செய்தது.
தற்போது, ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி நடைபோட்ட 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமான 'இந்தியன்-2' படத்தில் காஜல் நடித்துவருகிறார். கமல்ஹாசன் 90 வயது முதியவராக நடித்துவரும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
சேனாபதியாக வரும் கமல்ஹாசனுக்கு, மனைவியாக அமிர்தவள்ளி எனும் 85 வயது மூதாட்டி கதாபாத்திரத்தில், முதல் பாகத்தில் சுகன்யா நடித்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தில் அந்த பாத்திரத்தை காஜல் ஏற்று நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'பிகில்' படத்துக்கு போலி டிக்கெட் விற்ற ஆசாமிகள் கைது