தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் காஜல் அகர்வால். இவர், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட நடிகர்களின் படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானார். திரை உலகில் பெண்கள் நாயகியாக ஜொலிப்பது மிகக் கடினம். தமிழ் சினிமாவில் காதல் காட்சிகளிலும் இரண்டு பாடல்களில் மட்டுமே வந்து செல்லும் நாயகிகள் மக்களின் மனதில் இடம்பிடிப்பது ஆச்சரியம்தான். போட்டி நிறைந்த இடத்தில் நாயகியாக வெற்றிபெற்று தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் காஜல் அகர்வால்.
மேலும் பாலிவுட் ரீமேக் படமான குயின் படத்தில் நடித்துள்ள காஜல் அகர்வால் அப்படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், காதல் குறித்து மனம் திறந்துள்ள காஜல் அகர்வால், தானும் காதல் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவித்திருப்பது அவர்களது ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, 'நானும் ஒருவரை காதலித்தேன் ஆனால் அவர் திரையில் நடிப்பவர் இல்லை.
அப்போது நான் திரையில் வளர்ந்துவரும் காலகட்டம். அதிக படங்களில் நடித்ததனால் அவருடன் அதிக நேரம் செலவிடுவது கடினமாக இருந்தது. இந்த சம்பவம் பின்னாளில் அவருக்கு என் மீது அதிக வெறுப்பைத் தந்துள்ளது. இதனால் என்னுடன் இருந்த காதலை முறித்துக்கொண்டார். காதல் பிரிவில் இருந்து மீள மிகவும் கடினமாக இருந்தது' என்று வேதனையுடன் தெரிவித்தார். இந்தத் தகவல் அறிந்த காஜலின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.