ETV Bharat / sitara

க்யூட்டான குடும்பப் படத்தை பதிவிட்டு தீபாவளி வாழ்த்து கூறிய நடிகை ஜோதிகா! - நடிகை ஜோதிகா

தீபாவளி பண்டிகையையொட்டி நடிகை ஜோதிகா, தனது கணவர் சூர்யா மற்றும் குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

jyothika
author img

By

Published : Oct 27, 2019, 4:50 PM IST

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும்நிலையில் பல்வேறு பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஜோதிகா தனது குடும்பத்தாருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் தனது கணவர் சூர்யா, மாமனார் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி, மைத்துனர் கார்த்தி அவரது மனைவி, நாத்தனாரும் சூர்யாவின் சகோதரியமான பிருந்தா மற்றும் அவரது கணவர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

jyothika
ஜோதிகா பதிவிட்ட படம்

நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா மீண்டும் '36 வயதினிலே' படம் மூலமாக திரையுலகில் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார். அதன்பின் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர் 'மகளிர் மட்டும்', 'நாச்சியார்', 'காற்றின் மொழி', 'ராட்சசி' உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்தார்.

'குலேபகவாலி' இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிக்கா நடித்து சமீபத்தில் வெளியான 'ஜாக்பாட்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஜோதிகா அடுத்ததாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றுகிறார். இதனிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் ரஜினியின் 168ஆவது படத்திலும் ஜோதிகா நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Intro:Body:

jothika deepavali wish

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.