குலேபகாவலி படத்தை அடுத்து இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடித்து வரும் படம் ஜாக்பாட். 2D எண்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சூர்யா தயாரிக்கும் இப்படம் நகைச்சுவை நிறைந்த முழுநீள காமெடிப்படமாக உருவாகி வருகிறது. திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு விலகியிருந்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கிறார். கதையில் வித்தியாசம் காட்டும் ஜோதிகா இப்படத்தில் காமெடியான காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.
பிப்ரவரி 10ஆம் தேதி படத்தின் பூஜைகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'ஜாக்பாட்' படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிவடைந்தது. இந்நிலையில், ஜாக்பாட் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், ஜோதிகா செம்ம தில்லாக கண்ணாடி அணிந்து கார் மீது ஏறி நிற்பதுபோன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. மற்றொன்றில் ஜோதிகாவும், ரேவதியும் போலீஸ் உடையில் இருக்கின்றனர். தற்போது ஜாக்பாட் பட போஸ்டர் வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.