ETV Bharat / sitara

ஆர்யாவை இயல்பாக எட்டி உதைத்தேன் - நடிகை  இந்துஜா சிறப்புப் பேட்டி

'மகாமுனி' படத்தில் நடித்த தனது அனுபவம் பற்றி நடிகை இந்துஜா ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.

indhuja
author img

By

Published : Sep 7, 2019, 6:14 PM IST

ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் நடிகர் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மகாமுனி’. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சாந்தகுமார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஈடிவி பாரத்துக்கு இந்துஜா சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.

இந்துஜா சிறப்பு நேர்காணல்

மகாமுனி படம் குறித்து?

மகாமுனி படத்தில் விஜி என்ற கதாபாத்திரத்தில் மிகவும் லோயர் மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளேன். கணவனைச் சார்ந்து குடும்பம் மட்டுமே உலகமாக நினைத்து வாழும் பெண்ணாக நடித்துள்ளேன்.

சூழ்நிலைக்கேற்ப எப்படி பிரச்னைகளை எதிர்கொள்கிறது என்பதுதான் என்னுடைய கதாபாத்திரம். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் சாந்தகுமாருக்கு நன்றி .

இந்த படத்தில் ஆர்யாவை எட்டி உதைத்து நடித்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

நான் சாதாரணமாகத்தான் எட்டி உதைத்தேன். அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்ததால் அந்த காட்சியை நான் மிகவும் சாதாரணமாகத்தான் நடித்தேன். எனக்கு எதுவும் தனிப்பட்டு அந்த காட்சி தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் ஆர்யா ஒரு சீனியர் ஆர்டிஸ்ட் என்று காட்டிக்கொள்ளவில்லை. அவரும் கதாபாத்திரமாக மாறி இருந்ததால் அந்த காட்சியில் இயல்பாக நடிக்க முடிந்தது.

ஒரு குழந்தைக்குத் தாயாக நடித்து உள்ளீர்களே அதைப்பற்றி?

ஒரு குழந்தைக்கு தாயாக நடித்ததை நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கு அம்மா என்பது ஒரு தூய்மையான விஷயம். அப்படி நடிக்க முடிந்ததால் எனக்கு பெருமைதான். அதுமட்டுமல்லாமல் இவ்வளவு சீக்கிரத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறேனே என்று நான் யோசிக்கவும் இல்லை.

உங்களுடைய டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் அனைத்தும் வித்தியாசமாக உள்ளது அதைப்பற்றி?

இதற்காக நான் எந்தவித முயற்சியும், பயிற்சியும் எடுக்கவில்லை. இயக்குநர் இந்த கதையை சொல்லும்போது ஒரு மான் மாதிரி இருக்கவேண்டும் என்று சொன்னார்.

அதனால் நடிப்பில் வேகம் இருந்தது. பேசிய வசனங்களில் மாடுலேஷன் எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் பார்த்தது, எங்கேயோ கேட்டது என அனைத்தும் சேர்ந்து தானாகவே அமைந்தது.

படத்தில் நீங்கள் துடுக்கான பெண் நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படி?

நான் நிஜ வாழ்க்கையிலும் இப்படித்தான் மிகவும் துடுக்கான பெண்ணாக இருப்பேன். ஆனால் இந்த படத்தில் காட்டியது போன்று அல்லாமல் வேறு விதமான குறும்பான பெண்ணாகத்தான் இருக்கிறேன்.

நடிக்க விரும்பும் கதாபாத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

கதாபாத்திரங்களை நான் தேர்வு செய்யவில்லை. கதாபாத்திரங்கள்தான் என்னை தேர்வு செய்கிகின்றன என்று நினைக்கிறேன். ஒரு கதை உருவாகும்போது அந்த கதைக்கு ஏற்றவர் இவர்தான் என்று தோன்றும். அப்படித்தான் நான் அந்த கதைகளில் போய் சேர்கிறேன் என்று நினைக்கிறேன். நானாக எதையுமே தேர்வுசெய்வது இல்லை.

மகாமுனி படத்தில் நடிப்பதற்கு ஆடிஷன் வைத்தார்களா ?

இந்த படத்திற்கு ஆடிஷன் இல்லை என்று இயக்குநர் என்னிடம் கூறினார். ஆடிஷன் வைப்பதற்கு ஆப்ஷன்ஸ் மிகவும் குறைவு, உங்களால்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியும் என்று கூறினார். ஆடிஷன் இல்லாமல்தான் இந்த படத்தில் நான் நடித்தேன்.

நீங்கள் நடிக்க உள்ள படங்கள் பற்றி

விஜய் ஆண்டனியுடன் 'காக்கி' என்ற படத்தில் நடிக்க உள்ளேன் அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இது தவிர 'சூப்பர் டூப்பர்', 'பிகில்' ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

Intro:நடிகை இந்துஜா உடன் சிறப்பு பேட்டிBody:மகாமுனி படம் குறித்து

மகாமுனி படத்தில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.மிகவும் லோயர் மிடில் கிளாஸ் பெண்ணாக நடித்துள்ளேன். கணவனைச் சார்ந்து தைரியமான குடும்பம் மட்டுமே உலகமாக நினைத்து வாழும் பெண்ணாக நடித்துள்ளேன். சூழ்நிலைக்கேற்ப எப்படி பிரச்சனைகளை எதிர்கொள்கிறது என்பதுதான் என்னுடைய கதாபாத்திரம். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனர் சாந்தகுமார் அவர்களுக்கு நான் நன்றி .

இந்தபடத்தில் ஆர்யாவை எட்டி உதைக்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்

நான் சாதாரணமாகத்தான் எட்டி உதைத்தேன். அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி நடித்ததால் அந்த காட்சியை நான் மிகவும் சாதாரணமாகத்தான் நடித்தேன். அந்தக் காட்சி எனக்கு எதுவும் தனிப்பட்டு தெரியவில்லை ஆனால் இயக்குனரின் வழிகாட்டுதல் இருந்தது அதன்படி அந்த காட்சியில் நடித்தேன் .அதுமட்டுமல்லாமல் ஆரியா ஒரு சீனியர் ஆர்டிஸ்ட் என்று காட்டிக்கொள்ளவில்லை அவரும் கதாபாத்திரமாக மாறி இருந்ததால் அந்த காட்சியில் இயல்பாக நடிக்க முடிந்தது.

ஒரு குழந்தைக்குத் தாயாக நடித்து உள்ளீர்களா அதைப்பற்றி?

ஒரு குழந்தைக்கு தாயாக நடித்ததை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கு அம்மா என்பது ஒரு தூய்மையான விஷயம். இதை என்னால் படத்தில் நடிக்க முடிகிறது என்றால் எனக்கு பெருமை தான் அதுமட்டுமல்லாமல் இவ்வளவு சீக்கிரத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறேனே என்று நான் யோசித்தது இல்லை .

உங்களுடைய டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் அனைத்தும் வித்தியாசமாக உள்ளது அதை பற்றி?

இதற்காக நான் எந்த வித முயற்சியும் பயிற்சியும் எடுக்கவில்லை. இயக்குனர் இந்த கதை சொல்லும் பொழுது ஒரு மான் மாதிரி இருக்கவேண்டும் என்று சொன்னார் அதனால் நடிப்பில் வேகம் இருந்தது. பேசிய வசனங்களில் மாடுலேஷன் எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் பார்த்தது எங்கேயோ கேட்டது அனைத்தும் சேர்ந்து தானாகவே அமைந்தது.

படத்தில் நீங்கள் துடுக்கான பெண் நிஜ வாழ்க்கையில் நீங்கள் எப்படி?

நான் நிஜ வாழ்க்கையிலும் இப்படித்தான் மிகவும் துடுக்கான பெண்ணாக இருப்பேன். ஆனால் இந்த படத்தில் காட்டியது போன்று அல்லாமல் வேறு விதமான குறும்பான பெண்ணாகத்தான் இருக்கிறேன்.

நடிக்க விரும்பும் கதாபாத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

கதா பாத்திரங்களை நான் தேர்வு செய்யவில்லை. கதாபாத்திரங்கள்தான் என்னை தேர்வு செய்கிறது என்று நான் நினைக்கிறேன். ஒரு கதை உருவாகும் போது அந்த கதைக்கு ஏற்றவர் இவர்தான் என்று தோன்றும் அப்படித்தான் நான் அந்த கதைகளில் போய் சேர்கிறேன் என்று நினைக்கிறேன். நான் எதையுமே தேர்வுசெய்வது இல்லை.

மகாமுனி படத்தில் நடிப்பதற்கு ஆடிஷன் வைத்தார்களா ?

இந்த படத்திற்கு ஆடிஷன் இல்லை என்று இயக்குனர் என்னிடம் கூறினார். இதை நீங்களாகவே தான் நடிக்க வேண்டும் என்றும் ஆடிஷன் வைப்பதற்கு ஆப்ஷன்ஸ் மிகவும் குறைவு உங்களால் தான் இந்த கதாபாத்திரம் நடிக்க முடியும் என்று கூறினார். ஆடிஷன் இல்லாமல் தான் இந்த படத்தில் நான் நடித்தேன்.

Conclusion:நீங்கள் நடிக்க உள்ள படங்கள் பற்றி

விஜய் ஆண்டனியுடன் காக்கி என்ற படத்தில் நடிக்க உள்ளேன் அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது இவைத்தவிர சூப்பர் டூப்பர் பிகில் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.