'சந்திரலேகா' படத்தில் குரூப் டான்சராக நடனமாடியது மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைந்தவர் பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி (95). நடனமாடுவது மட்டுமின்றி மேடை நாடகங்கள், படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் கமல் ஹாசனின், '16 வயதினிலே', 'சின்ன வீடு' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் குரோம்பேட்டையில் வசித்துவந்த ஜெமினி ராஜேஸ்வரி வயது மூப்பு காரணமாக நேற்று (ஜூன் 27) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் 1000-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தயவு செய்து இப்படி செய்யாதீங்க - ரசிகர்களுக்கு அன்புக்கட்டளை போட்ட ராஷ்மிகா