சினிமாவில் நடிக்கும் நடிகைகளைவிட சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கே தற்போது அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா (Bharathi Kannamma) தொடரில் வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபரீனாவுக்கும் (Farina) பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
அந்தத் தொடரில் கதாநாயகிக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு வில்லி பாத்திரத்திற்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் வெண்பா அடிக்கடி தனது புகைப்படங்கள், ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, தான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இதனால் அவர் சீரியலில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குழந்தை பிறக்கும் கடைசி மாதம் வரை வெண்பா தொடர்ந்து சீரியலில் நடித்துவந்தார்.
இந்நிலையில் நடிகை ஃபரீனா ஆசாத்திற்கு (Farina Azad) இன்று (நவ.16) ஆண் குழந்தை (Baby Boy) பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்தச் செய்தி ஃபரீனா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சட்டம் தன் கடமையைச் செய்தே ஆக வேண்டும் - எம்.எஸ். பாஸ்கர் ஆவேசம்