ETV Bharat / sitara

'கிராமத்து வாழ்க்கையை இப்போது முழுமையாக அனுபவிக்கிறேன்' - தேவயானி - ஊரடங்கு குறித்து நடிகை தேவயானி

கரோனா தொற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடிகை தேவயானி விளம்பரப் படம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் நடித்த அனுபவத்தைக் குறித்தும், ஊரடங்கில் தான் கற்றுக்கொண்டதை குறித்தும் தேவயானி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

Actress devayani on her corona awareness ad

author img

By

Published : Jun 29, 2020, 2:56 PM IST

நடிகை தேவயானி நடித்த அரசின் கரோனா விளம்பரப் படம் தற்போது அனைத்து ஊடகங்களில் ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.

இதுகுறித்து நடிகை தேவயானி கூறுகையில், 'இந்த நெருக்கடியான கரோனா காலத்தில் எங்களைப்போன்ற கலைஞர்கள் மக்களிடம் பாடலின் மூலமும், குறும்படங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது, அது மிக வேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது. இந்த விளம்பரப் படத்தில் தேசிய விருதுபெற்ற ஆடுகளம் ஜெயபாலன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒரு தந்தை மகளுக்கான பாசப் பிணைப்போடு இந்த விளம்பரம் அமைந்திருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்பு 'பாரதி' படத்தில் எனக்கு மருமகனாக நடித்து, இப்போது 'கட்டில்' என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு நான் பங்கேற்ற 'கவசம் இது முகக்கவசம்' பாடலையும் இந்த விளம்பரத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார்.

Actress devayani on her corona awareness ad
நடிகை தேவயானி

இந்த ஊரடங்கு காலகட்டத்தில் எனது குடும்பத்தோடு அந்தியூர் அருகிலுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் வாழ்ந்துவருகிறேன். இடைப்பட்ட நாள்களில் அரசு அனுமதியோடு சென்னைக்கு வந்து தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துச் சென்றிருக்கிறேன். கிராமங்களின் வாழ்க்கையை முழுமையாக நான் இப்போது அனுபவித்துவருகிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது, கிராமத்து சமையல் செய்வது, குழந்தைகள், கணவருடன் விளையாடுவது, தினமும் இரவு நேரத்தில் என் மூத்த மகள் பகவத்கீதை வாசிக்க அதை நாங்கள் குடும்பத்தோடு கேட்பது, குழந்தைகளுக்கான கல்வி இப்படி வாழ்க்கையின் அர்த்தங்களை முழுமையாக செயல்படுத்தி வருகிறோம்.

'மகாபாரதம்', 'ராமாயணம்' போன்ற தொடர்கள் தொலைக்காட்சிகளில் மறு ஒளிபரப்பாகின்றன. இதை குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்து வருகிறோம். ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் முழுவீச்சுடன் நான் செயல்படுவேன். நல்ல தரமான படங்களுக்காக, கதாபாத்திரத்துக்காக நான் காத்திருக்கிறேன். நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களில் நான் தொடர்ந்து நடிப்பேன்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க...மின் கட்டணத் தொகையைப் பார்த்து மிரண்டுபோன டாப்ஸி - விளக்கமளித்த அதானி எலெக்ட்ரிசிட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.