80'களில் தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகையாக இருந்தவர் சித்ரா. குறிப்பாக, சேரன் பாண்டியன் படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக நடித்த இவரது கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
திரைத்துறையில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிய அவர், நல்லெண்ணெய் விளம்பரம் ஒன்றில் நடித்திட, நல்லெண்ணெய் சித்ரா என கோலிவுட்டில் அழைக்கப்பட்டார்.
இவர் சேரன் பாண்டியன், ஊர்காவலன், என் தங்கச்சி படிச்சவ, வெள்ளையத்தேவன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த நடிகை சித்ரா, நள்ளிரவு 12 மணியளவில் தனது வீட்டில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது
இவருக்கு ஸ்ருதி என்ற மகள் உள்ளார். தற்போது, பிளஸ்-டூ முடித்துள்ளார். குழந்தையை வளர்ப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள் சித்ரா இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக நடித்த படம் "என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா" என்ற படத்தில் flash back காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார்.
இதையும் படிங்க: கடுமையாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - முதலமைச்சர் ஆலோசனை