ETV Bharat / sitara

சின்னத்திரை நடிகை சித்ராவின் உடற்கூராய்வு நிறைவு

author img

By

Published : Dec 10, 2020, 11:40 AM IST

Updated : Dec 10, 2020, 12:48 PM IST

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சின்னத்திரை நடிகை சித்ராவின் உடற்கூராய்வு நிறைவு பெற்றது.

Actress Chitra anatomy started
Actress Chitra anatomy started

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடித்துவந்த பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று (டிச. 09) அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாகச் செய்திகள் வலம்வந்தன. இதையடுத்து அவரது முகத்தில் காயம் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலையா என்ற கோணத்தில் சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பிவந்தனர்.

இதைத்தொடர்ந்து அவருக்கு நிச்சயம்செய்யப்பட்ட ஹேமநாத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து சித்ராவின் இறப்பில் சந்தேகம் நிலவுவதாகப் பலரும் கருத்து தெரிவித்துவந்தனர்.

சித்ராவின் உடற்கூராய்வு நிறைவு

இச்சூழலில் இன்று (டிச. 10) சித்ராவின் உடற்கூராய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நடைபெற்றது. உடற்கூராய்வுக்குப் பின் அவரது இறப்பின் காரணம் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவர்கள் சிவகுமார், சதீஷ் ஆகியோர் இந்த உடற்கூராய்வை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க... பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை!

Last Updated : Dec 10, 2020, 12:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.