சென்னை சாலிகிராமத்தில் வசித்துவந்த நடிகை சித்ரா, நள்ளிரவு 12 மணியளவில் அவரது வீட்டில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
80'களில் தமிழ்த் திரைத் துறையில் பிரபலமான நடிகையாக இருந்த அவர், சேரன் பாண்டியன், ஊர் காவலன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் அவரது நடிப்பைப் பார்த்துப் பாராட்டியதைவிட, நிஜ வாழ்க்கையின் அவரது கருணை பண்பைப் பார்த்தால் அதிக பாராட்டுகள் குவியும்.

ஆம். அவர் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டிற்கு விஜயம் தரும் பறவைகளுக்குத் தண்ணீர், உணவு அளிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். பறவைகளும் நேரம் தவறாமல் வருவதைப் பழக்கமாக வைத்திருந்துள்ளது.

பக்கவாத நோயால் அவரது கணவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஓய்வின்றி குடும்பத்திற்காக உழைத்தது மட்டுமின்றி இரை தேடிவரும் உயிரினங்களுக்குப் பசியாற்றிவந்துள்ளார்.
இவரது இறப்பை அறியாத அந்தப் பறவைகளோ, வழக்கம்போல் உணவுக்காக வீட்டை வட்டமடித்துக்கொண்டிருந்தது பார்ப்போரைக் கண்கலங்கச் செய்கிறது.
இதையும் படிங்க: ஓணம் 'மகாபலி' கதை: பாதாளத்திலிருந்து பூலோகம் விசிட்!