ETV Bharat / sitara

பிளாக் அண்ட் வொயிட் சேலஞ்சை ஏற்ற ஆஷிமா! - Black and White challenge

நடிகை ஆஷிமா நாவலின் தனது பிளாக் அண்ட் வொயிட்  புகைப்படத்தைப் வெளியிட்டுள்ளார்.

ஆஷிமா
ஆஷிமா
author img

By

Published : Aug 9, 2020, 8:01 PM IST

சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயம் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வகையில் சமீப காலமாக பெண்ணை ஆதரிக்கும் பெண் என்ற ஹேஷ்டேக்கை (#WomanSupportingWoman) பதிவிட்டு, ஏராளமான பெண்கள் கறுப்பு - வெள்ளை புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஆஷிமா நார்வால், தனது படத்தை வெளியிட்டு மனிதம், அன்பு, பரிவு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஆஷிமா நார்வால் கூறுகையில், "நேர்மையுடன் நல்ல செயல்கள் செய்பவர்கள், நேர்மையாக இருப்பவர்கள், பிறருக்குத் தீங்கு செய்யாதவர்கள், நிஜ வாழ்க்கையில் நடிக்காதவர்கள் எனப்பலரும் ஆண், பெண் பாகுபாடு பார்க்காமல் பழகவும்.

பெண், பெண்ணுக்கு ஆதரவு காட்டுகிறாளா அல்லது ஆண் ஆணுக்கு ஆதரவு காட்டுகிறானா என்பது விஷயம் இல்லை. நல்லவர்களுக்கு நல்லவர்கள் ஆதரவு காட்ட வேண்டும். பல ஆண்கள் எனக்கு ஆதரவு காட்டியதால் தான், ஆசீர்வாதமான வாழ்க்கை எனக்கு அமைந்தது.

எனது பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆண், பெண் அனைவருக்கும் இந்த கறுப்பு - வெள்ளைப் படத்தைச் சமர்ப்பிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.