கரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கும் மேலாக வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, தற்போது மீண்டும் வெள்ளித்திரை போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனையுடன் நடத்திக்கொள்ளலாம் என, தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்தநிலையில், நடிகை ஆண்ட்ரியா மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னிடம் என் நண்பர் ஒருவர் மூன்று மாதத்திற்கு முன்பு, எப்போது படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொள்வீர்கள் என்று கேட்டார். அதற்கு நான் சற்றும் யோசிக்காமல் ஜூலை மாதம் என்று கூறினேன்.
ஆனால் நான் சொன்னது தற்போது உறுதியாகியுள்ளது. ஜூலை மாத நடுவில் நான் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டுள்ளேன். நான் சொன்னது அந்த பிரபஞ்சத்திற்குக் கேட்டு விட்டது போல" என அதில் கூறியுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.