‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்தாக புதியபடத்தை ஒன்றை இயக்கவுள்ளார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் ‘ஜித்தன்’ரமேஷ், கிட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரனே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.
![Aishwarya Rajesh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-iswarya-film-script-7205221_19102021110326_1910f_1634621606_660.jpg)
![Aishwarya Rajesh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-iswarya-film-script-7205221_19102021110326_1910f_1634621606_969.jpg)
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது.