ETV Bharat / sitara

அதிரடி திருப்பங்கள் நிறைந்த 'திட்டம் 2': விமர்சகர்கள் பாராட்டு!

author img

By

Published : Jul 28, 2021, 2:45 PM IST

Updated : Jul 28, 2021, 4:56 PM IST

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'திட்டம் இரண்டு' திரைப்படம், அதிரடி திருப்பங்கள் நிறைந்த படம் என விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர்.

plan b
plan b

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'திட்டம் இரண்டு'. த்ரில்லர் படமான இப்படத்தை தினேஷ் கண்ணன், வினோத் குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக திரைக்கு வரமால் இருந்த இப்படம், நேரடியாக ’சோனி லிவ்’ ஓடிடி தளத்தில் ஜூலை 30ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

'திட்டம் இரண்டு' படத்தின் சிறப்பு காட்சி சினிமா விமர்சகர்களுக்கு திரையிடப்பட்டது. தனது நண்பரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என அறியாத நாயகிஆதிரா, அதனை எப்படி கண்டுபிடிக்கிறார். அப்படி கண்டுபிடித்தபின் அவருக்கு தெரியவரும் திடுக்கிடும் உண்மை என்ன என்பவை விறுவிறுப்பாக இப்படத்தில் காட்டப்பட்டிருப்பதாக படம் பார்த்த விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பும், அவரது காவல் ஆய்வாளர் வேடமும் நன்றாக வந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ’என்னை உயர்த்தியது இந்தப் படம்தான்’- மனம் திறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

Last Updated : Jul 28, 2021, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.