சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து தனது திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கினார் நகைச்சுவை நடிகர் யோகி பாபு.
சென்னை வளசரவாக்கத்திலுள்ள விஜயகாந்த் வீட்டுக்கு யோகி பாபு நேரில் சென்று அவரை இன்று சந்தித்தார். அப்போது தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சி அழைப்பிதழை விஜயகாந்திடம் வழங்கி ஆசிபெற்றார். பின்னர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருமாறும் அழைப்புவிடுத்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகி பாபு, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
மிகவும் எளிமையாக நடைபெற்ற இவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.
திருமணத்துக்குப் பின் தொடர்ந்து கமிட்டான படங்களில் பிஸியான யோகி பாபு, தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுத்துவருகிறார்.