அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் பிகில். இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் பல்வேறு திரை நட்சத்திரங்களும் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசிய கருத்துகளுக்கு சிலர் விமர்சனங்கள் எழுப்பினர். இதில் நடிகர் விவேக் பேசிய கருத்துக்கு சிவாஜி நலப்பேரவையினர் கண்டனம் தெரிவித்தனர்.
-
1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க.
— Vivekh actor (@Actor_Vivek) September 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">1960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க.
— Vivekh actor (@Actor_Vivek) September 25, 20191960ல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி“நெஞ்சில் குடி இருக்கும்”. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது.ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும் போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது.இதுவே நான் பேசியது.அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க.
— Vivekh actor (@Actor_Vivek) September 25, 2019
இந்நிலையில், விவேக் அந்தக் கண்டனத்திற்கு தனது தரப்பு விளக்கத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "1960இல் இரும்புத்திரை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பாடிய பாடலின் முதல் வரி 'நெஞ்சில் குடி இருக்கும்'. அப்போது அது காதல் உணர்வைக் குறித்தது. ஆனால் இப்போது சகோ விஜய் அதை சொல்லும்போது மந்திர சக்தி வார்த்தையாக இருக்கிறது. இதுவே நான் பேசியது. அன்பு உள்ளங்கள் புரிந்து கொள்க" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசி மாட்டிக்கொண்ட நடிகர் விவேக்!