சென்னை, பள்ளிக்கரணை அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண்மீது அதிமுக கட்சியின் பேனர் விழுந்தது. நிலை தடுமாறிய சுபஸ்ரீ கீழே விழுந்தார். அப்போது சாலையில் அவரது பின்புறம் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
-
I hav already condemned our habit of sticking posters everywhere, in (kadhal sadugudu).this incident is very sad n unfortunate. My heart felt condolences to the family of Subasri . கண்ட இடங்களில் பேனர்,போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்
— Vivekh actor (@Actor_Vivek) September 13, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I hav already condemned our habit of sticking posters everywhere, in (kadhal sadugudu).this incident is very sad n unfortunate. My heart felt condolences to the family of Subasri . கண்ட இடங்களில் பேனர்,போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்
— Vivekh actor (@Actor_Vivek) September 13, 2019I hav already condemned our habit of sticking posters everywhere, in (kadhal sadugudu).this incident is very sad n unfortunate. My heart felt condolences to the family of Subasri . கண்ட இடங்களில் பேனர்,போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்
— Vivekh actor (@Actor_Vivek) September 13, 2019
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசை எதிர்த்து கண்டனக் குரலை எழுப்பி வருகிறார்கள். அதேசமயம், சுபஸ்ரீ குடும்பத்தாருக்கு ஆறுதலும் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கெதிராக கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் சுபஸ்ரீ குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அந்த பதிவில், “நான் நடித்த ‘காதல் சடுகுடு’ படத்தில் பேனர் கலாசாரத்தை கண்டித்து நடித்திருப்பேன். இந்த விபத்து எதிர்பாராவிதமாக நடந்து உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. சுபஸ்ரீயின் குடும்பத்தாருக்கு என்னுடைய இதயம் கனத்த அஞ்சலியைக் கூறிக் கொள்கிறேன். கண்ட இடங்களில் பேனர்,போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப்பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்” என தெரிவித்துள்ளார்.