சுஜித்தின் இறப்பு தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுஜித் குறித்து நடிகர் விவேக் பதிவிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில், 'கிட்டத்தட்ட நான்கு நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி. சுஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம். எங்களை யார் எடுப்பது?' என உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.
-
கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு!🙏🏼 சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது?😭
— Vivekh actor (@Actor_Vivek) October 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு!🙏🏼 சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது?😭
— Vivekh actor (@Actor_Vivek) October 29, 2019கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு!🙏🏼 சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது?😭
— Vivekh actor (@Actor_Vivek) October 29, 2019
திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயதுக் குழந்தை சுஜித்தை மீட்கும்பணி 80 மணி நேரத்தைத் தாண்டி நடைபெற்ற நிலையில், இன்று அதிகாலை நான்கு மணியளவில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. கடந்த 25ஆம் தேதி மாலை 5.40க்கு குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.
குழந்தையை மீட்க மீட்புக்குழுவினர் இரவு-பகல் பாராது கடுமையாக போராடிவந்த நிலையில், அந்த முயற்சி தோல்வியடைந்தது. அழுகிய நிலையில், மீட்கப்பட்ட குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்குப் பின்னர் பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. குழந்தையை உயிரோடு மீட்க வேண்டும் என தமிழ்நாடே பிரார்த்தனையுடன் காத்துக்கொண்டிருந்த நிலையில், நீங்கா துயரத்தை தந்துவிட்டு சுஜித் நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டான்.