ETV Bharat / sitara

விவேக்கின் ஐடியாவை ட்ரெண்டாக்கும் மீம் கிரியேட்டர்கள்

மரம் நடும் செயலை தனது காமெடியுடன் ஒப்பிட்டு மீம்ஸ் கிரியேட்டர்களிடம் மீம் உருவாக்குமாறு விவேக் ஐடியா தர, உடனடியாக அதுபோன்ற மீம்கள் தற்போது உலா வரத் தொடங்கியுள்ளன.

vivek idea to meme creators
Actor vivek
author img

By

Published : Feb 11, 2020, 3:01 PM IST

சென்னை: மீம் கிரியேட்டர்களுக்காக ஐடியா ஒன்றை கொடுத்த நடிகர் விவேக், அதை அவர்கள் தற்போது ட்ரெண்டாக்க தொடங்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்துகளையும், தான் செய்து வரும் விஷயங்களையும் பகிர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் விவேக், ட்ரெண்டான விஷயங்கள் பற்றி கருத்து தெரிவிக்கவும், விவாதிப்பதற்கும் தவறுவதில்லை.

அந்த வகையில், விவேக் நடித்த 'சந்தித்த வேளை' படத்தில் இடம்பெறும் காமெடி காட்சி ஒன்றின் டெம்ப்லேட்டில் தற்போது மீம்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. அந்த மீம் டெம்ப்லேட் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த நடிகர் விவேக், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் வேண்டுகோளை பின்பற்றி மரம் நடும் விஷயத்தை வைத்து மீம் உருவாக்குமாறு மீம் கிரியேட்டர்களுக்கு ஐடியா தந்தார்.

  • இந்த template இப்போ trend ஆகிறது. இது”வர்றான்;கலாம்கிறான்;மரம் நடுறான்; அப்புறம் நம்மள தண்ணி ஊத்த சொல்லீட்டு போயிர்றான்” என்று trend ஆனால் நன்றாக இருக்குமே!! pic.twitter.com/0GV843Xt26

    — Vivekh actor (@Actor_Vivek) February 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதைப் பார்த்த பலர், உடனடியாக விவேக்கின் ஐடியாவை வைத்து மீம்ஸ்களை உருவாக்கி பகிர்ந்தனர். அவற்றில் ஒரு சில மீம்களை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள விவேக், அந்த மீம் கிரியேட்டர்களுக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மகிழ்ச்சியும் கவலையும் கலந்து இருப்பதாக ட்வீட் செய்திருந்த விவேக், கொரோனா வைரஸ் கொடூரம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனவும், தமிழக முதல்வர் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தற்கு நன்றியையும் தெரிவித்து பதிவிட்டிருந்தார்.

  • மனதில் கவலையும் மகிழ்ச்சியும் கலந்து கிடக்கிறது. கவலை- கொரொனா வைரசின் கொடூரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விரைவில் உலகம் நிம்மதி அடையவேண்டும். மகிழ்ச்சி- காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப் பட்ட மண்டலமாக அறிவிக்கப் பட்டு இருப்பது. தமிழக முதல்வருக்கும்,அரசுக்கும் நன்றிகள்.

Intro:Body:

vivek idea to meme creators vivek shares new template for meme vivek tweet மீம் கிரியேட்டர்களுக்கு விவேக் தந்த ஐடியா விவேக் ட்வீட் 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.