சென்னை: விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்ற தவெக முதல் மாநாட்டில், விஜய் திராவிட மாடல், பாசிசம் என பல்வேறு கருத்துக்களைப் பேசினார். இந்நிலையில், விஜய் மாநாடு பேச்சு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தவெக தலைவர் விஜய், திமுகவுக்கு எதிராக பேசியது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “திமுக என்பது ஆலமரம். காய்த்த மரம் தான் கல்லடி படும். இந்த ஆலமரத்தின் மீது கல்லடி பட்டாலும் தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறது. யார் தாக்கி பேசினாலும் கவலைப்படுவதில்லை. திமுக தேம்ஸ் நதியைப் போன்றது” என கூறியுள்ளார்.
#WATCH | Chennai, Tamil Nadu: BJP leader Tamilisai Soundararajan says, " i wish my brother vijay all the best...it (actor and tvk president vijay's speech) was like seeing a 2-and-a-half-hour movie...from the beginning itself he was saying that the party that do divisive politics… pic.twitter.com/mt5pbJegiE
— ANI (@ANI) October 27, 2024
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விஜய் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “தம்பி விஜய்க்கு வாழ்த்துக்கள். இரண்டரை மணி நேர படம் பார்த்தது போல் உள்ளது. விஜய் ஆரம்பம் முதலே பிரித்தாளும் அரசியல் செய்பவர்கள் எனது கொள்கைக்கு எதிரி என கூறியுள்ளார். நீங்கள் மத்திய அரசைப் பற்றி தெரியாமல், உங்கள் கொள்கை எதிரியை பாஜக என தேர்வு செய்யக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
ஐஜேகே நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பேசுகையில், “மாநாட்டில் விஜய் ஆற்றிய உரை மெய்சிலிர்க்க வைத்தது. தன்னெழுச்சியாக மக்கள் கூட்டம் வந்ததையும் அவர்களது உணர்வையும் பார்க்க முடிந்தது. எந்த கட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ? அதை துணிவோடும், தெளிவோடும், வீரத்துடனும், விவேகத்துடனும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் விஜய்யின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.
#WATCH | Chennai, Tamil Nadu: AIADMK leader Kovai Sathyan says, " his (actor and tvk president vijay) ideology is like old wine in a new bottle. he has taken a leaf from every political party's ideologies and tried to give masalas and mix that will suit tvk. this is a decent start… pic.twitter.com/vqB1l6bfiU
— ANI (@ANI) October 27, 2024
இதனைத் தொடர்ந்து அதிமுக செய்தித் தொடர்பாளர் கோவை சத்யன் பேசுகையில், “விஜய் கட்சியின் கொள்கை புதிய பாட்டிலில் பழைய ஒயின் போன்றது. ஒவ்வொரு கட்சியின் கொள்கையில் இருந்து எடுத்து தவெகவிற்கு ஏற்றவாறு ஒரு மசாலா மிக்ஸ் கொண்ட கொள்கையை அறிவித்துள்ளார். விஜயை பொது வாழ்க்கைக்கு வரவேற்கிறேன். தற்போது ஜனநாயகம் என்ற பெயரில் குடும்ப ஆட்சி நடக்கிறது. அதனை விஜய் விமர்சித்துள்ளார்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கூத்தாடி என்பதா?... “உச்சத்தை விட்டு வந்திருக்கிறேன்”... உதாரணம் சொன்ன விஜய்!
அதேபோல, விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது.
‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை… pic.twitter.com/A2bkBQN9Kw
— Aadhav Arjuna (@AadhavArjuna) October 27, 2024
அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்” என கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்