கரோனாவால் ஏற்பட்டுள்ள முடக்கத்தால் திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெறாததால் ஏராளமான திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
திரைப்படப் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று திரைத் துறையில் பல்வேறு சங்கங்களிலிருந்து மத்திய அரசுக்கு வேண்டுகோள்வைக்கப்பட்டது.
இந்த வேண்டுகோளை அடுத்து திரைப்பட படப்பிடிப்பு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷால் தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
![விஷாலின் ட்விட்டர் பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11:35:22:1598249122_tn-che-01-actorvishal-shoothing-script-7204954_24082020105747_2408f_1598246867_468.jpg)
அந்தப் பதிவில் அவர், "படப்பிடிப்புத் நடத்த அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி. இது நம்பிக்கை அளித்துள்ளது. அனைத்துப் படப்பிடிப்புக் குழுவினரும் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று நம்புகிறேன். இதேபோன்று தமிழ்நாடு அரசிடமிருந்து படப்பிடிப்பிற்கான பாதுகாப்புக்குரிய விதிகளுடன்கூடிய அனுமதியையும் எதிர்பார்க்கிறோம்" எனக் கூறியுள்ளார்.