ETV Bharat / sitara

'நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார்' - எனிமி படத் தயாரிப்பாளரை பாராட்டிய விஷால் - latest cinema news

நடிகர்கள் ஆர்யா, விஷால் நடித்துள்ள எனிமி திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (அக்.29) சென்னையில் நடைபெற்றது.

விஷால்
விஷால்
author img

By

Published : Oct 30, 2021, 10:34 AM IST

நடிகர்கள் ஆர்யா, விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் எனிமி. இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (அக்.29) சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்வில் விஷால் பேசுகையில், "என்னுடைய நல்ல நண்பர் கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், கன்னட திரைப்பட உலகத்திற்கும் எனது ஆழ்ந்த ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.

'எனிமி' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்கு சந்தோஷமாக போகிறேன் என்றால் அதற்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் தான் காரணம். எனக்கு ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார்.

அவர் பணத்தை மனதில் வைத்து படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்தப் படத்தை ஓடிடிக்கு பெரிய விலைக்கு விற்பனை செய்திருக்கலாம்.

ஆனால் ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென படத்தை தியேட்டருக்கு கொண்டு வந்ததற்கே அவரை வணங்க வேண்டும். அவருடன் அடுத்து ஒருபடத்திலும் இணைக்கிறேன். ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக் கதையில் ஜாமி ( ஆர்யா) இருந்தால் நன்றாக இருக்கும், அவரது பாத்திரத்தை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்.

அற்புதமான திரைக்கதையுடன் வந்தார். அவரது கற்பனை தான் இந்த படம். ஆர்யாவிடம்.. உலகமே அழியப்போகிறது என்று சொன்னால், அசராமல் இரு சைக்கிளிங் முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்வார். எதையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார். இப்போது என்ன வென்று தெரியவில்லை திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்தப் படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கும் போது, அப்போது தான் சர்பாட்டா நடித்துவிட்டு வந்தார். உண்மையிலேயே பாக்ஸிங் கற்றுக்கொண்டு வந்து என்னை அடி வெளுத்து விட்டான். ஏற்கனவே அவருடன் 'அவன் இவன்' படம் செய்திருக்கிறேன். இந்தப்படமும் சூப்பராக இருக்கும். அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்ய காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'இனிய நண்பர் விரைவில் குணமடைய விரும்புகிறேன்'- ரஜினி குறித்து கமல்ஹாசன் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.