'இமைக்கா நொடிகள்' பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிவரும் திரைப்படம் ’கோப்ரா’. விக்ரம் நடித்துவரும் இப்படத்தில் ’கேஜிஎஃப்’ படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
-
#COBRA Resumes 🐍🐍 #ChiyaanVikram @7screenstudio @Lalit_SevenScr @arrahman @SrinidhiShetty7 pic.twitter.com/xZDrHIU0kg
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#COBRA Resumes 🐍🐍 #ChiyaanVikram @7screenstudio @Lalit_SevenScr @arrahman @SrinidhiShetty7 pic.twitter.com/xZDrHIU0kg
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) December 3, 2020#COBRA Resumes 🐍🐍 #ChiyaanVikram @7screenstudio @Lalit_SevenScr @arrahman @SrinidhiShetty7 pic.twitter.com/xZDrHIU0kg
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) December 3, 2020
இந்நிலையில் மீண்டும் ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
அதில், “கோப்ரா மீண்டும் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஜனவரி மாததிற்குள் முடித்து, கோடை விடுமுறைக்குப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், ‘கோப்ரா’ படத்தின் முதல் பாடலான, ‘தும்பி துள்ளல்’ வெளியாகி விக்ரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காணொலி வாயிலாக நடைபெறுமா ஆஸ்கர் விழா? - விளக்கம் கொடுத்த பிரதிநிதி