அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த சூழலில் நேற்று முன்தினம் (மே. 7) திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து, அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
![முதலமைச்சரை நேரில் சந்தித்த நடிகர் விஜயகுமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20210509-wa0018_0905newsroom_1620556519_1103.jpg)
இந்நிலையில், நடிகர் விஜயகுமாரும், அவரது குடும்பத்தினரும் இன்று (மே.9) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினர். நடிகர் விஜயகுமாருடன், அவரது மகனும் நடிகருமான அருண் விஜய், இயக்குநர் ஹரி ஆகியோர் வந்திருந்தனர். முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து நடிகர் அருண் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
![உதயநிதி ஸ்டாலினுக்கு பொன்னாடை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/img-20210509-wa0025_0905newsroom_1620556519_966.jpg)
இதையும் படிங்க:'நண்பேண்டா'- முதலமைச்சருக்கும், எம்எல்ஏ உதயநிதிக்கும் வாழ்த்து தெரிவித்த சந்தானம்