நடிகர் விஜய் அறிவுறுத்தலின்படி மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் N. ஆனந்த் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில், 'ஜூன் மாதம் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள். தமிழ்நாட்டில் கரோனா தாக்கம் வீரியமாகிவரும் நிலையில் பொதுமக்கள், ரசிகர்கள் நலன் கருதி பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாட்டங்கள், நலத்திட்ட உதவிகள், செய்தித்தாள் வாழ்த்து விளம்பரங்கள் என எந்தவித செயல்களிலும் ஈடுபடாமல் பாதுகாப்பாக சமூக விலகலை கடைபிடித்து குடும்பத்தை பார்த்துக்கொள்ளும்படி நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஒன்றிய, தொகுதி, நகரம், பகுதி, வார்டு இளைஞரணி மக்கள் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் அவர்களின் அறிவுரையை பின்பற்றி நடக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...விஜய் பாடலில் கரோனா விழிப்புணர்வு... கலக்கிய விருதுநகர் தலைமை காவலர்!