ETV Bharat / sitara

கனவில் வரும் சம்பவங்கள் நிஜத்தில் நடந்தால்? #விதார்த்25 - actor vidharths carbon

நடிகர் விதார்த் நடிக்கும் 25ஆவது திரைப்படத்திற்கு 'கார்பன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

actor vidharths new movie titled carbon
actor vidharths new movie titled carbon
author img

By

Published : Mar 30, 2021, 1:13 PM IST

படத்தின் கதையை ’கார்பன்’ எனும் வார்த்தை சரியாக பிரதிபலித்ததால் அதையே தலைப்பாக வைத்ததாக இயக்குநர் ஶ்ரீனிவாசன் படம் குறித்து கூறியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விதார்த், அவரது கனவில் காண்பெதெல்லாம் நிஜத்தில் பிரதியெடுத்ததுபோல் நடக்கும். நாம் கார்பன் பேப்பரில் எழுதும்போது அச்சுப்பிசகாமல் அடி பேப்பரில் பதிவதுபோல் இந்தச் சம்பவம் நடைபெறுவதால் படத்திற்கு ‘கார்பன்’ என்றத் தலைப்பு பொருத்தமாக இருக்குமென தலைப்பை வைத்ததாகக் கூறியுள்ளார் இயக்குநர்.

இப்படத்தில் தன்யா பாலகிருஷ்ணன் நாயகியாக நடிக்க, விக்ரம் ஜெகதீஷ், பாவ்லின் ஜெஷிகா, மாரிமுத்து, மூணார் ரமேஷ், நிதீஷ் அஜய், வினோத் சாகர், மூர்த்தி டபுட் செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வித்தார்த்தின் கார்பன்
வித்தார்த்தின் கார்பன்
முன்பே கூறியதுபோல் குப்பை தொட்டி, குப்பை பொருள்கள், குப்பை லாரி ஆகியவை படத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக அமைந்திருக்கும். படத்தின் கதை ஆறு இரவுகள், ஏழு பகல்களில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. புதுமையான களத்தில் வித்தியாசமான த்ரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
வித்தார்த்தின் கார்பன்
வித்தார்த்தின் கார்பன்

சாம் CS இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜெயச்சந்திரன் BFA கலை இயக்கம் செய்துள்ளார். கனல் கண்ணன் சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்ற, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு 38 நாட்களில் முடிக்கப்பட்டது. பெரும்பாலான காட்சிகள் சென்னை, திருக்கோயிலூரில் படமாக்கப்பட்டுள்ளன. Benchmark Films சார்பில் ஜோதி முருகன், ஶ்ரீனிவாசன் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு உற்சாகத்துடன் நடனமாடிய அலிஷா அப்துல்லா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.