ETV Bharat / sitara

'வாடிவாசல்' படத்துக்கு முன்பாக 'சிறுத்தை' சிவாவுடன் இணையும் சூர்யா!

author img

By

Published : Sep 21, 2021, 7:38 PM IST

வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்திற்கு முன்பாக சூர்யா 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள புதியப்படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Suriya
Suriya

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எதற்கும் துணிந்தவன்' என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவுபெறுகிறது.

இப்படத்திற்குப் பின் சூர்யா ஜல்லிக்கட்டை மையப்படுத்தி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'வாடிவாசல்' படத்தில் நடிக்க இருந்தார். இந்தப் படத்திற்காக சூர்யா காளைகளுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

சூர்யா
சூர்யா

தற்போது 'வாடிவாசல்' படத்திற்கு முன்பாக சூர்யா 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாவுள்ள, புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது.

'அண்ணாத்த' படம் ரிலீசுக்கு பின் நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்காக அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 'வாடிவாசல்' திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் தம்பி படத்தை தயாரிக்கும் சூர்யா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.