நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சூர்யா, தனது அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ- மாணவிகளின் கல்விகளுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்தச் சூழ்நிலையில் தனது மன்றத்தின் வடசென்னை தெற்கு மாவட்டத் தலைவரும், ஐ.டி. விங் தலைவருமான ஹரி ராஜ் - பிரியா திருமணத்திற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். மேலும் மணமகனுக்குத் தாலியும் எடுத்துக்கொடுத்துள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க... 'ஆர்ஆர்ஆர்' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!