சந்தானம் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு', 'தில்லுக்கு துட்டு 2' ஆகிய ஹாரர் காமெடி படங்களை இயக்கியவர் ராம்பாலா. இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனை அடுத்து ராம்பாலா தற்போது மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் 'இடியட்' என்னும் ஹாரர் காமெடி வகையிலான படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
'இடியட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகவுள்ள 'இடியட்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு - இடியட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
சென்னை: மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகவுள்ள ஹாரர் காமெடி படத்துக்கு 'இடியட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.