ETV Bharat / sitara

கறுப்புச் சட்டை, நரை முடி கெட்டப்பில் அசத்தும் சிம்பு! - actor simbu new movie

கறுப்புச் சட்டை, நரை முடி என புதிய கெட்டப்பில் சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

சிம்பு
author img

By

Published : Jun 17, 2019, 12:08 PM IST

'செக்கச் சிவந்த வானம்', 'வந்தா ராஜாவாதான் வருவேன்' ஆகிய படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் 'மாநாடு' படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்துகொண்டார். அப்போது அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வலைதளத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்தது. மேலும், படப்பிடிப்பின்போது நேரத்திற்கு வருவதில்லை என்ற சர்ச்சைகளைக் தாண்டி பல படங்களுக்கான அவரது கால்ஷீட் நிரம்பி வழிகிறது.

தற்போது தனது முன்னாள் காதலி ஹன்சிகாவிற்காக சிறப்பு தோற்றத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பூஜை சென்னையில் நடந்து முடிந்துள்ளது. கன்னட பட இயக்குநர் நார்தன் இயக்கும் புதிய படத்தில் கெளதம் கார்த்திக்குடன் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் பூஜையின்போது கறுப்புச் சட்டை, நரைமுடியுடன் புதிய கெட்டப்பில் இருக்கும் சிம்புவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

சிம்பு நடி்ககும் புதிய படம்
சிம்பு நடிக்கும் புதிய படம்

த்ரில்லர் கதையாக உருவாகிவரும் இப்படத்தில் சிம்பு தாதாவாக நடிக்கிறார். 'தொட்டி ஜெயா' படத்திற்கு பிறகு ரெளடிசம், தாதா, கத்தி தோட்டா என புதிய கெட்டப்பில் மாசான நடிகராக வலம்வர இருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.