ETV Bharat / sitara

'திருமணம் செய்யும் எண்ணமில்லை..!' - விளக்கமளித்த சிம்பு - marriage

நடிகர் சிம்பு தனது உறவுக்கார பெண்ணை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிம்பு
author img

By

Published : May 26, 2019, 6:40 PM IST

நடிகர் சிம்புவின் தம்பி குறளரசனுக்கு கடந்த மாதம் திருமணம் ஆனது. தம்பியின் திருமண விழாவில் சிம்பு கலந்துகொண்ட புகைப்படம் வலைதளத்தில் வைரலானது. குண்டாக இருந்த சிம்பு உடல் எடையைக் குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் 'மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.

சிம்பு புகைப்படம்
சிம்பு புகைப்படம்

மேலும், இயக்குநர் ஹரி, முத்தையா, துரை ஆகியோர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. சிம்புவின் கல்யாணம் எப்போது என்று அவரது தந்தை டி.ராஜேந்தரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு கண்ணீருடன் பதில் அளித்த டி.ராஜேந்தர், சிம்புவிற்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று தெரிவித்திருந்தார். இ்ந்நிலையில், சிம்பு தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. வலைதளப்பக்கங்களிலும் இந்த செய்தி வைரலானது.

செல்ஃபி எடுக்கும் சிம்பு
செல்ஃபி எடுக்கும் சிம்பு

இதனையடுத்து, இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில், "எனது திருமணம் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அது முற்றிலும் பொய்யானது. ஊடக நண்பர்களால்தான் எனது வளர்ச்சிப் பாதை மேலோங்கி இருக்கிறது. எனது மகிழ்ச்சியையும், துக்கத்தையும் எடுத்துச் செல்வது நீங்கள்தான். ஊடகங்கள் மீது பெரு மரியாதை வைத்திருக்கிறேன். எனக்கு திருமணம் செய்யும் எண்ணம் தற்போது இல்லை. கண்டிப்பாக திருமணம் செய்யும்பொழுது நானே அந்த அறிவிப்பை வெளியிடுவேன்" என்று, தெரிவித்துள்ளார்.

தந்தை மகள் பாசத்தை வலியுறுத்துகிறது ஆனந்த வீடு    
                                  
மூவி மேநிலா மேக்கர்ஸ்  தயாரிப்பில் உருவாக்கியுள்ளது ஆனந்த வீடு 
சிவாஜிகணேசன் நதியா நடித்து வெளிவந்த அன்புள்ள அப்பா படத்திற்கு பிறகு தந்தை மகள் பாசத்தை வலியுறுத்தும் படமாக  ஆனந்த வீடு உருவாக்கப்பட்டுள்ளது, விரோதிகளால் மகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து இருந்து. காக்கும் முயற்சியில் ஒரு தந்தை ஈடுபடும் போது திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறுகின்றன, பாசமான மகளை சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றுகின்றார என்பதன் பின்னணியில் உருவாகி உள்ளது  ஆனந்த வீடு,  

கதை நாயகனாக சிவாயம். அறிமுக நாயகன் துர்கா பிரசாத். நாயகி  ககனதீபிகா சுரபி பிக்சர்ஸ் ஜோதி முருகன் முக்கிய வேடம். 

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சண்டை காட்சிகள் படமாக்கப் பட்டுள்ளது பாடல் காட்சிகள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டது, படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி இசை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது மிக விரைவில் திரைக்கு வர உள்ளது,
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.